தீபாவளி பண்டிகை 2024 அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் கொண்டாடப்படக்கூடிய இந்த பண்டிகையில் புத்தாடை அணிந்து, வீட்டை அலங்கரித்து, பலகாரங்களை பகிர்ந்து மகிழ்ச்சியை நாம் கொண்டாடுவது வழக்கம். இந்த அற்புத நாளில் 12 ராசிகளை சேர்ந்தவர்களும் எந்த நிற ஆடையை அணிந்தால் வீட்டில் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு ஏற்படும் மற்றும் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் என்பதை இந்த ஜோதிட வழிகாட்டி மூலம் தெரிந்து கொள்வோம்.
தீபாவளி 2024: ராசி வாரியாக அதிர்ஷ்ட நிறங்கள்
தீபாவளி நாளில் லட்சுமி தேவியின் அருளைப் பெற்று, உங்கள் வாழ்க்கையில் செல்வ வளத்தையும் மகிழ்ச்சியையும் பெருக்க, ஒவ்வொரு ராசிக்காரர்களும் அணிய வேண்டிய அதிர்ஷ்ட நிற ஆடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஜோதிட ஆலோசனைகள் மூலம் உங்கள் தீபாவளியை மேலும் சுபமாக்குங்கள்.
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்கான பலன்கள்
மேஷம்: மேஷ ராசியினர் தீபாவளி பண்டிகை லட்சுமி பூஜையின் போது சிவப்பு நிற ஆடைகளை அணிவது நன்மை தரும். இதனால் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிறைந்து, லட்சுமி தேவியின் அருள் முழுமையாக கிடைக்கும்.
ரிஷபம்: சுக்கிரன் ஆளக்கூடிய ரிஷப ராசியை சேர்ந்தவர்கள் தீபாவளி தீப வழிபாட்டின் பொது நீல நிற ஆடைகளை அணிவது மகாலட்சுமி தேவியின் அருள் கடாட்சம் கிடைக்கும். மிகப்பெரிய நிதி நன்மைகள் பெற்றிடலாம்.
மிதுனம்: மிதுன ராசியினர் தீபாவளி பண்டிகை அன்று ஆரஞ்சு நிற ஆடையை அணிவது மிகவும் சுபமான பலன்களை அள்ளித் தரும். தன லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
கடகம், சிம்மம், கன்னி ராசிக்கான பலன்கள்
கடக ராசி: சந்திரன் ஆளும் கடக ராசியை சேர்ந்தவர்கள் தீபாவளி பூஜையின் போது பச்சை நிற ஆடையை அணிவது மங்களகரமான பலனை வாரி வழங்கும்.
சிம்மம்: சிம்ம ராசியை சேர்ந்தவர்கள் இந்த தீபாவளி பண்டிகை நாளில் பழுப்பு நிற ஆடையை அணிவது நன்மை தரும். உங்களின் வீட்டில் மகிழ்ச்சியும், செயலில் வெற்றியும் கிடைக்கும்.
கன்னி ராசி: கன்னி ராசிக்காரர்கள் தீபாவளியன்று வெள்ளை நிற ஆடைகளை அணிய வேண்டும். இதனால் உங்கள் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். நீங்கள் பச்சை நிறத்தை அணிவதும் நன்மை தரும்.
துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான பலன்கள்
துலாம்: துலாம் ராசிக்காரர்கள் இந்த தீபாவளியன்று மஞ்சள் அல்லது அதனுடன் தொடர்புடைய நிறங்கள் உள்ள ஆடையை அணிவதால் செல்வம் மற்றும் வாழ்வில் வளம் பெருகும். லட்சுமி தேவியின் பரிபூரண அருள் கிடைக்கும்.
விருச்சிகம்: விருச்சிக ராசியை சேர்ந்தவர்கள் வரும் தீபாவளியன்று மெரூன் நிற ஆடைகளை அணிவதால் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். செயலில் வெற்றிகள் தேடி வரும்.
தனுசு ராசி: தனுசு ராசியை சேர்ந்தவர்கள் இந்த தீபாவளியன்று ஊதா நிற ஆடைகளை அணிவது மிகச்சிறப்பான நல்ல பலன்களைத் தரும். இந்த நிற ஆடையை அணிவதால் மகாலட்சுமி தேவியின் நல்லருள் நிறைய கிடைக்கும்.
மகரம், கும்பம், மீனம் ராசிக்கான பலன்கள்
மகரம்: மகரம் ராசிக்காரர்கள் தீபாவளி தினத்தின் போது லட்சுமி தேவியின் அருளைப் பெற்றிட நீல நிற ஆடைகளை அணிவது நன்மை தரும். இது உங்களுக்கு செல்வத்தையும் அமைதியையும் கொண்டு வரும்.
கும்பம்: கும்பம் ராசியினர் தீபாவளி நன்னாளில் சாம்பல் நிற ஆடைகளை அணிவது நன்மை தரும். இந்த நிற ஆடையை அணிவதால் லட்சுமி தேவியின் அருளும் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மீனம்: மீனம் ராசிக்காரர்கள் லட்சுமி தேவியின் அருளைப் பெற்றிட இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிவது நன்மை தரும். இதனால் உங்களின் நிதி நிலையில் முன்னேற்றமும், பல நன்மைகளையும் பெறுவார்கள்.
குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஜோதிட தகவல்களும் பரிகாரங்களும் மத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவை அனுமானங்களின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்த ராசி பலன்களை பின்பற்றுவதன் மூலம் லட்சுமி தேவியின் அருள் மற்றும் ஜாதக ரீதியான நன்மைகளை நீங்கள் பெறலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
தீபாவளி பண்டிகை 2024 அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இது ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் வரும்.
ஒவ்வொரு ராசிக்கும் ஏற்ற அதிர்ஷ்ட நிற ஆடைகளை அணிவதன் மூலம் லட்சுமி தேவியின் அருளைப் பெறலாம். உதாரணமாக, மேஷ ராசியினர் சிவப்பு நிற ஆடை அணியலாம், ரிஷப ராசியினர் நீல நிற ஆடை அணியலாம்.
ஜோதிட ரீதியாக, குறிப்பிட்ட நட்சத்திரங்கள் மற்றும் கிரக நிலைகளுக்கு உகந்த நிறங்களை அணிவது நேர்மறை ஆற்றலை ஈர்த்து, அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தரும் என்று நம்பப்படுகிறது. இது லட்சுமி பூஜை போன்ற புனித நாட்களில் மிகவும் முக்கியம்.