ஜோதிடம் என்பது பன்னிரண்டு ராசிகளையும், 27 நட்சத்திரங்களையும், நவகிரகங்களையும் கொண்டு கணிக்கப்படும் ஒரு அற்புதமான கலை. ஜோதிடத்தில் பல்வேறு விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில், இயல்பாகவே ஒரு சில ராசியினர் சிறப்பான அமைப்புகளை பெற்றிருப்பார்கள். இந்த மூன்று ராசிகள் ஜோதிடத்தில் மிகவும் அதிர்ஷ்டமான ராசிகளாகக் கருதப்படுகின்றன. அவர்கள் யார் என்று விரிவாகப் பார்ப்போம்.
ஜோதிடத்தின் பார்வையில் அதிர்ஷ்டமான ராசிகள்
ஒவ்வொரு ராசியும் ஒரு குறிப்பிட்ட கிரகத்தால் ஆளப்படுகிறது. இந்த கிரகங்களின் தாக்கம் அந்த ராசியினரின் குணாதிசயங்களையும், அதிர்ஷ்டத்தையும் நிர்ணயிக்கிறது. இங்கு நாம் பார்க்கப் போகும் மூன்று ராசிகளும், இயற்கையாகவே சுப கிரகங்களின் அருளைப் பெற்று, வாழ்க்கையில் உயர்ந்து நிற்பவர்கள்.
1. தனுசு ராசி - ஞானமும் குரு அருளும்
குரு பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசியினர் பிறப்பிலேயே அதிக ஞானத்தைப் பெற்று இருப்பார்கள். இவர்கள் பரந்த சிந்தனை மற்றும் மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களுக்கு இயற்கையாகவே குரு பகவானுடைய அருள் இருப்பதால், ஜோதிடத்தில் குரு பகவான் சுப கிரகமாகப் பார்க்கப்படுகிறார். ஆதலால், தனுசு ராசியினருக்கு அனைத்து விஷயங்களிலும் குரு பகவானின் அருளால் வாழ்க்கையில் உயரத்தை அடைந்து விடுவார்கள். மேலும், இவர்களுக்கு ஆன்மீக சிந்தனை பிறவியிலிருந்தே அதிகம் காணப்படும். ஜோதிட பலன்களின்படி தனுசு ராசியினர் சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்வார்கள்.
2. துலாம் ராசி - செல்வமும் சமூக மரியாதையும்
சுக்கிர பகவானை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசியினர் அழகாகவும், சந்தோஷமாகவும், சமுதாயத்தில் ஒரு அமைதியான நிலையில் வாழ வேண்டும் என்று விரும்புவார்கள். சுக்கிரனின் ஆட்சி இவர்கள் ராசியில் இருப்பதால், இவர்களுக்கு பொருளாதாரத்தில் எப்பொழுதும் அவ்வளவு எளிதாக சிரமங்கள் வந்து விடுவதில்லை. இது, அவர்களின் வாழ்வில் ஒருவித யோகத்தை வழங்குகிறது. அதுமட்டுமில்லாமல், துலாம் ராசிக்காரர்கள் கைராசிக்காரர்கள் என்றும் சொல்லுவார்கள். எந்த ஒரு காரியத்தையும் துலாம் ராசி நபர்களைக் கொண்டு நாம் தொடங்கும் பொழுது, அந்த காரியம் நல்ல விதத்தில் வெற்றி அடைகிறது. இவர்களின் ஜோதிட அமைப்பு செல்வ செழிப்பை உறுதி செய்கிறது.
3. மேஷ ராசி - தைரியமும் தலைமைத்துவமும்
செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களிடம் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிக அளவில் காணப்படும். இவர்கள் எப்பொழுதும் ஒரு அதிகார இடத்தில் இருக்க வேண்டும் என்ற ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். மேலும், செவ்வாய் பகவானுடைய தாக்கம் இவர்களுக்கு அதிக அளவில் இருப்பதால், ஒரு வழியில் கதவு அடைந்து விட்டாலும் மறு வழியில் இவர்களுக்கு எப்படியேனும் கதவுகள் திறந்து வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைந்து விடுவார்கள். இந்த ஜோதிட அமைப்பு அவர்களை ஒரு சிறந்த தலைவராகவும், முன்னோடியாகவும் திகழ வைக்கிறது.