உட்காரும் போதும், சாப்பிடும் போதும் கால் ஆட்டும் பழக்கம் உள்ளதா? இந்த சிறிய பழக்கம் உங்கள் வாழ்க்கையில் பெரிய ஜோதிட மற்றும் ஆன்மிக ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என சாஸ்திரங்கள் எச்சரிக்கின்றன. பண இழப்பு, மனக் குழப்பம், அதிர்ஷ்டமின்மை போன்ற பல பிரச்சனைகளுக்கு இதுவே காரணமாக அமையலாம். இந்த கட்டுரையில், கால் ஆட்டுவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் அவற்றை தவிர்ப்பதன் முக்கியத்துவம் பற்றி விரிவாகக் காண்போம்.
கால் ஆட்டுவதன் ஆபத்தான விளைவுகள்
தற்போது நவநாகரீகமான கால சூழலில் பலரும் ஸ்டைல், ஜாலி என நினைத்து உட்கார்ந்து இருக்கும் போது பல தவறுகளை செய்கிறார்கள். காலப்போக்கில் அது அவர்களின் பழக்கமாகவே மாறி விடுகிறது. ஆனால் இந்த பழக்கங்கள் தான் வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்சனைகள், துன்பங்களுக்கு காரணமாக அமைவதாக ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கின்றன. அவற்றில் பலருக்கும் இருக்கும் முக்கியமான பழக்கம் தான் உட்கார்ந்திருக்கும் போது கால் ஆட்டுவது. சும்மா இருக்கும் போது, டென்ஷனாக இருக்கும் போது, ஜாலியாக இருக்கும் போது கால் ஆட்டுவது சிலரின் பழக்கம். அதே போல் தங்களை ஸ்டையிலான, கம்பீரமாக காட்டிக் கொள்ள கால் மேல் கால் போட்டு அமர்வது போன்ற பழக்கம் இருக்கும்.
கால் ஆட்டினால் என்ன நடக்கும்? கால் ஆட்டுவது குடும்பத்திற்கு நல்லதில்லை என பெரியவர்கள் சொல்லி கேட்டிருப்போம். ஆனால் எதற்காக இதை சொல்கிறார்கள், இதற்கு என்ன காரணம் என பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. ஆனால் ஜோதிட ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் இது தீமையான பல விளைவுகளை ஏற்படுத்தும் என காலம் காலமாக எச்சரிக்கப்பட்டு வருகிறது. அப்படி கால் ஆட்டுவதால் என்ன கெட்டது நடக்கும்? ஏன் கால் ஆட்டக்கூடாது என சொல்கிறார்கள்? வாங்க தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிட ரீதியான பாதிப்புகள்
- சந்திரனின் நிலை: ஜோதிட சாஸ்திரப்படி, கால் ஆட்டுவதால் ஜாதகத்தில் சந்திரனின் நிலை சரியில்லாமல் ஆகும். இதனால் கஷ்டம் வரும்.
- மன அழுத்தம்: உட்கார்ந்தோ, படுத்துக் கொண்டோ கால் ஆட்டினால் கெட்டது நடக்கும். டென்ஷன், கவலை, நோய் எல்லாம் வரும்.
- பண இழப்பு: நிறைய செலவு, அதனால் பண இழப்பு ஏற்படும். பயம் இருக்கும்.
பூஜையில் கால் ஆட்டினால் ஏற்படும் விளைவுகள்
பூஜை செய்யும் போது கால் ஆட்டுவதால் செய்த பூஜைக்கு பலன் கிடைக்காது. அதோடு கடவுளின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். இது கடவுளை அலட்சியம், அவமதிப்பு செய்வதாக அர்த்தம். இதனால் மனதில் பலவிதமான குழப்பம், தவறான முடிவுகள் எடுப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
உட்காரும் போது கால் ஆட்டினால் ஏற்படும் கஷ்டங்கள்
- லட்சுமி தேவியின் கோபம்: உட்கார்ந்து இருக்கும் போது கால் ஆட்டுனால் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். பணம் கஷ்டம் வரும்.
- அதிர்ஷ்டமின்மை: செய்யும் வேலைகளில் தோல்வி ஏற்படும். அதிர்ஷ்டம் இருக்காது. சந்தோஷம் இருக்காது. பணம் சம்பாதிக்க கஷ்டப்பட வேண்டி இருக்கும்.
சாப்பிடும் போது கால் ஆட்டினால் ஏற்படும் பாதிப்புகள்
சாப்பிடும்போது கால் ஆட்டக்கூடாது. சாப்பிடும்போது கால் ஆட்டுனால் சாப்பாட்டுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்பதாக அர்த்தம். வீட்டில் சாப்பாடு குறையும். சாப்பிடும் போது கால் ஆட்டுனால் கெட்ட சக்தி வரும். அது உங்களையும் உங்க குடும்பத்தையும் பாதிக்கும். பண இழப்பு, பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
முடிவுரை
இந்த கட்டுரையின் மூலம் கால் ஆட்டுவதன் ஜோதிட ரீதியான பாதிப்புகள் மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். வீண் செலவுகள், பணக்கஷ்டம், மனக்குழப்பம் போன்ற பிரச்சனைகளை தவிர்க்க, இந்த பழக்கத்தை உடனே கைவிடுங்கள். ஜோதிடம் 360 உங்கள் வாழ்வின் அனைத்து பிரச்சனைகளுக்கும் வழிகாட்ட இங்கு உள்ளது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
கால் ஆட்டுவதால் ஜாதகத்தில் சந்திரனின் நிலை பாதிக்கப்பட்டு, கஷ்டங்கள், டென்ஷன், கவலை, நோய் மற்றும் பண இழப்பு ஏற்படலாம். லட்சுமி தேவியின் கோபத்திற்கும் ஆளாக நேரிடும்.
இல்லை, பூஜை செய்யும் போது கால் ஆட்டுவதால் செய்த பூஜைக்கு பலன் கிடைக்காது. இது கடவுளை அவமதிப்பதாக கருதப்பட்டு, மனதில் குழப்பம், தவறான முடிவுகள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
ஆம், சாப்பிடும் போது கால் ஆட்டக்கூடாது. இது சாப்பாட்டிற்கு மரியாதை கொடுக்காத செயல். இதனால் வீட்டில் சாப்பாடு குறையலாம், கெட்ட சக்திகள் குடும்பத்தை பாதிக்கலாம் மற்றும் பண இழப்பு ஏற்படலாம்.