Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

கார்த்திகை மாதம் 2025: பண்டிகைகள், விரதங்கள் மற்றும் சுப முகூர்த்த நாட்கள்

தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு பெற்ற மாதங்களில் கார்த்திகை மாதமும் ஒன்று. திரும்பிய பக்கமெல்லாம் பக்தி மனம் கமழும் மாதமாக கார்த்திகை மாதம் விளங்கும். முருகப் பெருமான் உட்பட ஐயப்பன், சிவபெருமான், பெருமாள் ஆகிய தெய்வங்களின் வழிபாட்டிற்கு மிகவும் ஏற்ற மாதமாகும். கார்த்திகை மாதம் தீப வழிபாட்டிற்குரிய மாதமாகும். இறைவனை ஒளி வடிவமாக வழிபடுவது இந்த மாதத்தின் தனிச் சிறப்பு ஆகும். கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் சிவன் கோயில்களில் நடைபெறும் சோமவார சங்காபிஷேகம் மிகவும் உயர்வானதாகும். சிவபெருமானை கார்த்திகை மாதத்தில் சங்கு தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வழிபடுவது பெரும் புண்ணியத்தையும், செல்வத்தையும் தரக்கூடியதாகும். இந்த ஆண்டு 2025 கார்த்திகை மாதத்தில் எந்த நாளில் என்ன உற்சவம், விரத நாட்கள், ஜோதிட ரீதியான சுப முகூர்த்தங்கள் வருகிறது என்பதை இங்கே காணலாம்.

கார்த்திகை 2025 முக்கிய விசேஷங்கள்

ஆங்கில மாதம்தமிழ் தேதிகிழமைவிசேஷங்கள்
டிசம்பர் 02கார்த்திகை 16செவ்வாய்பரணி தீபம்
டிசம்பர் 03கார்த்திகை 17புதன்திருக்கார்த்திகை தீபம்
டிசம்பர் 04கார்த்திகை 18வியாழன்பாஞ்சராத்திர தீபம்

கார்த்திகை 2025 முக்கிய விரத நாட்கள்

விரதங்கள்ஆங்கில தேதிதமிழ் தேதிகிழமை
அமாவாசைநவம்பர் 19கார்த்திகை 03புதன்
பெளர்ணமிடிசம்பர் 04கார்த்திகை 18வியாழன்
கிருத்திகைடிசம்பர் 03கார்த்திகை 17புதன்
திருவோணம்நவம்பர் 26கார்த்திகை 10புதன்
ஏகாதசிடிசம்பர் 01
டிசம்பர் 15
கார்த்திகை 15
கார்த்திகை 29
திங்கள்
திங்கள்
சஷ்டிநவம்பர் 26
டிசம்பர் 10
கார்த்திகை 10
கார்த்திகை 24
புதன்
புதன்
சங்கடஹர சதுர்த்திடிசம்பர் 08கார்த்திகை 22திங்கள்
சிவராத்திரிநவம்பர் 18கார்த்திகை 02செவ்வாய்
பிரதோஷம்நவம்பர் 17
டிசம்பர் 02
கார்த்திகை 01
கார்த்திகை 16
திங்கள்
செவ்வாய்
சதுர்த்திநவம்பர் 24கார்த்திகை 08திங்கள்

கார்த்திகை 2025 சுப முகூர்த்த நாட்கள்

ஆங்கில தேதிதமிழ் தேதிகிழமைமுகூர்த்தம்
நவம்பர் 23கார்த்திகை 07ஞாயிறுவளர்பிறை முகூர்த்தம்
நவம்பர் 27கார்த்திகை 11வியாழன்வளர்பிறை முகூர்த்தம்
நவம்பர் 30கார்த்திகை 14ஞாயிறுவளர்பிறை முகூர்த்தம்
டிசம்பர் 01கார்த்திகை 15திங்கள்வளர்பிறை முகூர்த்தம்
டிசம்பர் 08கார்த்திகை 22திங்கள்தேய்பிறை முகூர்த்தம்
டிசம்பர் 10கார்த்திகை 24புதன்தேய்பிறை முகூர்த்தம்
டிசம்பர் 14கார்த்திகை 28ஞாயிறுதேய்பிறை முகூர்த்தம்
டிசம்பர் 15கார்த்திகை 29திங்கள்தேய்பிறை முகூர்த்தம்

கார்த்திகை 2025 அஷ்டமி, நவமி, கரி நாட்கள்

திதிஆங்கில தேதிதமிழ் தேதிகிழமை
அஷ்டமிநவம்பர் 28
டிசம்பர் 12
கார்த்திகை 12
கார்த்திகை 26
வெள்ளி
வெள்ளி
நவமிநவம்பர் 29
டிசம்பர் 13
கார்த்திகை 13
கார்த்திகை 27
சனி
சனி
கரி நாட்கள்நவம்பர் 17
நவம்பர் 26
டிசம்பர் 03
கார்த்திகை 01
கார்த்திகை 10
கார்த்திகை 17
திங்கள்
புதன்
புதன்

கார்த்திகை 2025 வாஸ்து நாள் மற்றும் நேரம்

ஆங்கில தேதிதமிழ் தேதிகிழமைவாஸ்து நல்ல நேரம்
நவம்பர் 24கார்த்திகை 08திங்கள்காலை 11.29 முதல் பகல் 12.05 வரை

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கார்த்திகை மாதம் ஐயப்பன், சிவபெருமான், முருகப் பெருமான், பெருமாள் போன்ற தெய்வங்களின் வழிபாட்டிற்கும், தீப வழிபாட்டிற்கும் மிகவும் ஏற்ற மாதமாகும். இது பக்தி மனம் கமழும் ஒரு சிறப்புமிக்க தமிழ் மாதமாகும்.

2025 ஆம் ஆண்டில், பரணி தீபம் டிசம்பர் 02 அன்று செவ்வாய்க்கிழமை வருகிறது, திருக்கார்த்திகை தீபம் டிசம்பர் 03 அன்று புதன்கிழமை வருகிறது.

Our Other Services