கார்த்திகை விரதம் என்பது முருகப்பெருமானுக்கு உகந்த மிகவும் முக்கியமான விரதமாகும். இந்த புண்ணிய நாளில் முறையாக விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் அனைத்து நலன்களும், நல்வாழ்வும் கிடைக்கும். ஜோதிட ரீதியாக ஏற்படும் தடைகள் கூட நீங்கும்.
கார்த்திகை விரதத்தின் முக்கியத்துவம் மற்றும் பலன்கள்
வாழ்க்கையில் யோகமே இல்லை என்பவர்கள் கூட கார்த்திகை நட்சத்திர நாளில் விரதம் இருந்து வழிபட்டால் அவர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றம் நிச்சயம் வரும்.
- திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம்
- வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சி
- சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேறுதல்
- செவ்வாய் தோஷம் உள்ளிட்ட அனைத்து ஜோதிட பிரச்சனைகளும் நீங்கும்
- முருகப்பெருமானின் அருள் முழுவதுமாக கிடைக்கும்.
கார்த்திகை விரதம் கடைபிடிக்கும் முறை
கார்த்திகை நட்சத்திரம் வரும் நாட்களில், பின்வரும் முறைகளைப் பின்பற்றி முருகனை வழிபடலாம்:
- அதிகாலை குளியல் மற்றும் பூஜைஅதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, வீட்டின் பூஜை அறையில் ஷட்கோண கோலம் வரைய வேண்டும். அதன் மீது ஆறு அகல் விளக்குகளில் தீபம் ஏற்ற வேண்டும். முடியாதவர்கள் முருகனின் படத்திற்கு இரண்டு பக்கங்களிலும் நெய் விளக்கு ஏற்றி வைக்கலாம்.
- நைவேத்தியம் படைத்தல்பழம், தேன் கலந்த பால், சர்க்கரை பொங்கல் என ஏதாவது ஒன்றை முருகப்பெருமானுக்கு நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். வெற்றிலை தீபம் ஏற்றுவது சிறப்பான பலன்களைத் தரும்.
- விரத உணவு முறைநாள் முழுவதும் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் இருக்கலாம். முடியாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியவர்கள் உணவில் உப்பு சேர்க்காமல் சாப்பிடலாம்.
- மந்திரங்கள் மற்றும் பாடல்கள்நாள் முழுவதும் கந்த சஷ்டி கவசம் அல்லது கந்தகுரு கவசம் பாடி முருகனை வழிபட வேண்டும். "ஓம் சரவண பவ" அல்லது "முருகா" என்ற திருநாமத்தை உச்சரிப்பது மிகவும் சக்தி வாய்ந்தது.
- முருகன் ஆலயங்கள் தரிசனம்மாலையில் அருகில் உள்ள முருகன் ஆலயங்களுக்குச் சென்று முருகனைத் தரிசித்து, அதன் பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். ஆறுபடை வீடுகள் போன்ற முக்கிய முருகன் ஆலயங்களை தரிசிப்பது மிகுந்த புண்ணியத்தைத் தரும்.
வேல் வழிபாடு மற்றும் திருப்புகழ்
கார்த்திகை நட்சத்திரம் நாளில் வேல் வழிபாடு செய்வதும் சிறப்பான பலன்களைத் தரும். வீட்டில் வேல் வைத்திருப்பவர்கள் வேலுக்கு அபிஷேகம் செய்து வழிபடலாம். வேலை வழிபடுபவர்களுக்கு அந்த வேலே துணையாக இருந்து அவர்களைக் காக்கும் என்பார்கள்.
வேலுக்குரிய மந்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்யலாம். வேல்மாறல், வேல் வகுப்பு, வேல் விருத்தம் ஆகியவற்றை படிக்கலாம். முருகனை நினைத்து விரதம் இருப்பவர்கள் திருப்புகழ் படிப்பது மிகச்சிறந்த வழிபாடாகும். "எங்கெல்லாம் திருப்புகழ் பாடப்படுகிறதோ அங்கெல்லாம் முருகன் வருவான்" என அருணகிரிநாதரே கூறியுள்ளார்.