Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

நவகிரக தோஷங்களால் ஏற்படும் நோய்கள் மற்றும் பரிகாரங்கள்

உங்கள் ஜாதகத்தில் நவகிரகங்கள் அமர்ந்திருக்கும் நிலையைப் பொறுத்து, உடல்நலப் பிரச்சனைகளும் பரிகாரங்களும் அமையும். ஒவ்வொரு கிரகமும் எந்தெந்த நோய்களை ஏற்படுத்தும், அதற்கான எளிய ஜோதிடப் பரிகாரங்கள் என்ன என்பதை ஜோதிடம் 360 இங்கே விளக்குகிறது.

நவகிரகங்கள் தரும் நோய்களும் பரிகாரங்களும்

சூரியன் தொடர்பான நோய்கள்

ஜாதகத்தில் சூரிய பகவானின் அமைப்பு சரியில்லாத சூழல் இருப்பின் தலை, மூளை, இதயம், கண், எலும்பு முறிவு மற்றும் வலிப்பு தொடர்பான பிரச்சனைகள் அல்லது நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பரிகாரம்:

சூரிய பகவான் வலுப்பெற தினமும் சூரிய வழிபாடு செய்வதும், நீர் வார்த்து அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.

சந்திரன் தொடர்பான நோய்கள்

ஜோதிடத்தில் மனோகாரகன் என அழைக்கப்படக்கூடிய சந்திர பகவான் சாதகமற்ற நிலையில் இருப்பின் அவருக்கு மனநோய், சரியாக தூக்கம் இன்மை, அடிக்கடி தூக்கத்திலிருந்து எழுந்திருத்தல், தேவையற்ற பயம், வெறி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

பரிகாரம்:

சந்திரனை வலுப்படுத்த திங்கட்கிழமைகளில் சிவபெருமான் வழிபாடு செய்வதும், பால், தயிர், தயிர் சாதம், வெள்ளி, முத்து போன்ற வெள்ளை நிற பொருட்களை திங்கட்கிழமைகளில் தானம் செய்யலாம்.

செவ்வாய் தொடர்பான நோய்கள்

அங்காரகன் என அழைக்கப்படக்கூடிய செவ்வாய் பகவான் ஜாதகத்தில் சாதகமற்ற சூழ்நிலையில் இருப்பின் அவருக்கு தோல் சார்ந்த வியாதி, பித்த கோளாறு, அப்பெண்டிஸ் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தைரியம் இல்லாத நபராக இருப்பார் அல்லது அதிக கோபம் கொண்டவராக இருப்பார். இதனால் மன அழுத்தம், ரத்த கொதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ரத்தம் தொடர்பான பிரச்சனைகளுக்கு செவ்வாய் காரணமாக அமைகிறார்.

பரிகாரம்:

செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமான் வழிபாடு செய்வதும், பருப்பு தானம் செய்வதும் நன்மை தரும். அருகிலுள்ள முருகன் ஆலயங்கள் சென்று வணங்குவதும் சிறந்தது.

புதன் தொடர்பான நோய்கள்

ஜாதகத்தில் புதன் பகவான் சாதகமற்ற சூழ்நிலையில் இருப்பின் அவருக்கு வாதம், பித்தம், கபம் தொடர்பான பிரச்சனைகளும், தொண்டை, மூக்கு தொடர்பான நோய்களும் ஏற்படும். புத்தி கூர்மையற்றவராக இருப்பார்.

பரிகாரம்:

புதன்கிழமைகளில் விநாயகர் பெருமானை வழிபாடு செய்வதும், பசுக்களுக்கு புல் கொடுத்து வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் தொடர்பான நோய்கள்

முழு சுபர் என அழைக்கப்படக்கூடிய குருபகவான் ஜாதகத்தில் சாதகமற்ற சூழ்நிலையில் இருந்தால் அவருக்கு மூட்டு வலி, முதுகு வலி, மலச்சிக்கல், உடல் வீக்கம் போன்ற உடல்நல பிரச்சினைகள் சந்திக்க நேரிடும். தீயோர் நட்பு கிடைக்கும். போதைப்பொருள் பழக்கம் உள்ளவராக இருப்பார்.

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் விஷ்ணு பகவானை வழிபடுவதும், மஞ்சள் நிற பழங்கள், உளுந்தம் பருப்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்களை தானம் செய்வது நல்லது.

சுக்கிரன் தொடர்பான நோய்கள்

களத்திரகாரகன் சுக்கிர பகவான், ஒருவரின் ஜாதகத்தில் சாதகமற்ற, நீசநிலையில் இருப்பின் அவருக்கு வாதம், கபம் தொடர்பான நோய்கள் ஏற்படும். உடலில் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும். தாம்பத்தியத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பரிகாரம்:

வெள்ளிக்கிழமைகளில் பயிர், வண்ண ஆடைகள், அரிசி, வெள்ளி போன்ற பொருட்களை தானமாக வழங்கலாம்.

சனி பகவான் தொடர்பான நோய்கள்

கர்ம காரகன் என அழைக்கப்படக்கூடிய சனி பகவான் ஜாதகத்தில் சாதகமற்ற சூழ்நிலையில் இருப்பின் அவருக்கு வாதம், கபம் தொடர்பான நோய்களும், சுவாச பிரச்சனை, புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது.

பரிகாரம்:

சனிக்கிழமைகளில் அனுமான் வழிபாடு செய்வதும், சனிபகவான் மந்திரத்தை உச்சரிப்பதும், நல்லெண்ணெய் கோவிலுக்கு தானமாக வழங்குவது நல்லது. மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யவும்.

ராகு தொடர்பான நோய்கள்

சர்ப்ப கிரகமான ராகு பகவான் சாதகமற்ற நிலையில் ஜாதகத்தில் இருப்பின் அவருக்கு தொற்று நோய்கள், விஷ பாதிப்பு, இதய நோய்கள், கை, கால் தொடர்பான வலி மற்றும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பரிகாரம்:

ராகு பகவானுக்குரிய மந்திரமான 'ஓம் ராம் ரஹ்வே நம’ என்ற பீஜ மந்திரத்தை தினமும் உச்சரிக்கவும்.

கேது தொடர்பான நோய்கள்

ஜாதகத்தில் கேது தொடர்பாக சாதகமற்ற அமைப்பு இருப்பின் அந்த நபருக்கு செரிமானம் தொடர்பான பிரச்சனைகளும், தோல் சார்ந்த நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

பரிகாரம்:

பைரவர் வழிபாடு செய்வது நல்லது. தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்ட வாழை இலையில் சாதம் படைக்கவும். நாய்களுக்கு ரொட்டி துண்டு அல்லது அவைகளுக்கு பிடித்த உணவு கொடுக்கவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

சூரியனால் தலைவலி, இதயம் தொடர்பான பிரச்சனைகள்; சந்திரனால் மனநோய், தூக்கமின்மை; செவ்வாயால் தோல் வியாதி, ரத்தக் கொதிப்பு; புதனால் வாதம், தொண்டை நோய்கள்; குருவால் மூட்டுவலி, மலச்சிக்கல்; சுக்கிரனால் உள் உறுப்புகள் பாதிப்பு; சனியால் சுவாசப் பிரச்சனைகள், புற்றுநோய்; ராகுவால் தொற்று நோய்கள்; கேதுவால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஆகியவை ஏற்படலாம்.

ஒவ்வொரு கிரகத்திற்கும் குறிப்பிட்ட தெய்வ வழிபாடு (எ.கா. சூரியனுக்கு சூரியன், சந்திரனுக்கு சிவன், செவ்வாய்க்கு முருகன்), தொடர்புடைய நிறப் பொருட்களை தானம் செய்தல், மந்திர ஜெபங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல், விலங்குகளுக்கு உணவளித்தல் போன்ற பரிகாரங்களை மேற்கொள்ளலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் நவகிரகங்கள் அமைந்துள்ள அமைப்பின்படி, உடல்நலக் கோளாறுகள் அல்லது யோகங்கள் அமைகின்றன. கிரகங்களின் சாதகமற்ற நிலை பல நோய்களை ஏற்படுத்தக்கூடியதாக ஜோதிடம் கூறுகிறது.

Our Other Services