ருத்ராட்சம் அணிபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், அது பற்றிய சந்தேகங்களும், தவறான புரிதல்களும் இன்னும் பலரிடமும் உள்ளன. சிவ அம்சமாக கருதப்படும் ருத்ராட்சத்தின் மகத்துவம், யார் அணியலாம், எப்படி பராமரிப்பது, மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான தெளிவான விளக்கங்களை இந்த ஜோதிட வழிகாட்டி உங்களுக்கு வழங்குகிறது.
ருத்ராட்சம் என்றால் என்ன? அதன் மகிமை என்ன?
ருத்ராட்சம் என்பது சிவபெருமானின் கண்களிலிருந்து தோன்றிய கண்ணீர்த்துளிகள் என புராணங்கள் கூறுகின்றன. உலகை காப்பதற்காக சிவபெருமான் அருளியதுதான் இந்த ருத்ராட்சம். இதன் மகிமையைச் சொற்களால் விவரிக்க முடியாது. இதை அணிந்தவர்களுக்குக் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.
வாழ்நாளில் ருத்ராட்சமும் விபூதியும் அணிந்தவர் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை. ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மஹா பேரானந்தத்தைத் தரும். ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும், அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத் தரும். இது ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
யார் ருத்ராட்சம் அணியலாம்?
ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும் போதும், தூங்கும் போதும், எல்லாக் காலத்திலும் ருத்ராட்சம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.
- சிறுவர், சிறுமியர்: அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும்.
- பெண்கள்: தீர்க்க சுமங்களியாக வாழ்வார்கள். அவர்களின் கணவருக்கும் தொழிலில் வெற்றியும், இல்லத்தில் லட்சுமி கடாட்சமும் நிறைந்திருக்கும்.
- அனைவரும்: ஆண், பெண் இருபாலரும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டாயம் ருத்ராட்சம் அணிய வேண்டும். இது நம்மைப் படைத்ததன் நோக்கமான பாவங்களைப் போக்கி சிவபெருமானின் திருவடியை அடைய உதவுகிறது.
எத்தனை முகம் ருத்ராட்சம் அணிவது சிறப்பு?
எல்லா இடங்களிலும் எளிதில், மிக சாதாரண விலையில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்சம் அணிவதே போதுமானது. ஈசனின் திருமுகங்கள் ஐந்து, நமச்சிவாய மந்திரம் ஐந்தெழுத்து, பஞ்சபூதங்கள் ஐந்து, நமது கை கால் விரல்கள் ஐந்து, புலன்கள் ஐந்து. ஆகையால் மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்சத்தையே படைக்கின்றார். ஐந்து முக ருத்ராட்சங்கள் அணிவதே மிகச் சிறப்பு. இதில் மற்ற எல்லா முக ருத்ராட்சங்களினால் கிடைக்கும் பலன்களும் அடங்கிவிடும்.
ருத்ராட்சத்தை அடிக்கடி கழற்றலாமா? முக்கிய சந்தேகங்களுக்கு விளக்கம்
ருத்ராட்சத்தை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலும் கழற்றவே கூடாது என்பதே சிவபுராணத்தின் கூற்று. நெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய சொல்லி வந்தாலே போதுமானது. சிலர் நீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு, கணவன் - மனைவி இல்லற தாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்சத்தை அணியக் கூடாது என்று சொல்வதுண்டு. ஆனால், இந்த மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானது கிடையாது.
"நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்சம் அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்கள் ஆன்மாக்கள் மகிழும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது."
தூங்கும்போதும் கூட ருத்ராட்சத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. இது ஆன்மிக பலன்களைக் கூட்டும் ஒரு சிறந்த கருவியாகும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு போன்றவற்றை எதிர்பாப்பவர்கள் ருத்ராட்சம் அணிந்து பஞ்சாட்சர மந்திரம் ஜெபித்து வந்தால் 18 மாதத்தில் பிரார்த்தனைகள் நிறைவேறும்.
ருத்ராட்சம் அணிவதன் அற்புத பலன்கள்
- பாவங்கள் நீங்கும்: நீராடும் போது ருத்ராட்சம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும். கொடிய பாவங்கள் தீர்ந்து, வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் குறையும்.
- ஐஸ்வர்யம் பெருகும்: லஷ்மி கடாட்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வர்யங்களும் ஏற்படும்.
- ஆரோக்கியம் மேம்படும்: இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
- கிரக தோஷ நிவர்த்தி: ருத்ராட்சம் அணிந்தவருக்கு நவகிரஹங்கள் நன்மையே செய்யும், கிரக தோஷத்தின் தாக்கங்கள் குறையும். இது ஜோதிட ரீதியாகவும் பலன் தரும்.
- ஆன்மிக விடுதலை: ருத்ராட்சம் அணிந்திருக்கும் வேலையில் உயிர் பிரிந்தால் சிவபெருமான் திருவடியை அடைந்து நற்கதி ஏற்படும். மறுபிறவி இல்லை.
- எதிர்மறை சக்திகளிடமிருந்து பாதுகாப்பு: பேய், பிசாசு, பில்லி, சூனியம், மந்திரம், தந்திரம் இவை அனைத்தும் ருத்ராட்சம் அணிந்திருப்பவர்களை ஒன்றுமே செய்ய முடியாது.
இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். ஏழு ஜென்மங்கள் தொடர்ந்து புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு ருத்ராட்சம் அணியும் மஹாபாக்கியம் கிடைக்கும்.