வேலை அல்லது தொழில் என்பது வாழ்க்கையின் அத்தியாவசியமான ஒன்றாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணவும், சாதிக்கவும் ஒரு நிலையான வேலை அல்லது தொழில் மிக முக்கியம். ஆனால் சிலர், வேலையில் ஸ்திரத்தன்மை இல்லாமல் அடிக்கடி மாற்று வேலை தேடுவதையோ அல்லது தொழிலில் கடும் உழைப்பிற்குப் பிறகும் முன்னேற்றம் இல்லாமலிருப்பதையோ சந்திக்கின்றனர். இத்தகையவர்களுக்கு, வாஸ்து சாஸ்திரத்தின்படி சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் மிகப்பெரிய வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையைக் காணலாம். உங்கள் தொழில் அல்லது பணியில் ஏற்றம் பெற இந்த வாஸ்து குறிப்புகள் நிச்சயம் உதவும். ஜோதிடம் மற்றும் வாஸ்து இரண்டும் ஒருவரின் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வர உதவுகின்றன.
வேலை, தொழில் முன்னேற்றத்திற்கான வாஸ்து டிப்ஸ்:
- நிலைத்தன்மைக்கு சுவர்: அலுவலகம் அல்லது தொழில் செய்யும் இடத்தில் நீங்கள் அமரும் இடத்திற்கு பின்னால் சுவர் இருப்பது மிகவம் சிறப்பானது. கூடுதல் நலன் கிடைக்க அந்த சுவற்றில் மலைகள், சிகரங்களின் படங்களை தொங்க விடுங்கள். இது உங்களுடைய வேலை அல்லது தொழிலில் நிலைத்தன்மையையும், வளர்ச்சியையும் தரும்.
- முன் உள்ள காலி இடம்: நீங்கள் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு முன் நிறைய காலி இடங்கள் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு புதிது புதிதாக பல யோசனைகள் கிடைக்கும்.
- சரியான திசையில் அமர்தல்: நீங்கள் மீட்டிங்கிற்கான இடத்தை தேர்வு செய்கிறீர்கள் என்றால் தென்மேற்கு திசையில் அமர்வது சிறப்பானதாகும்.
- செடிகள் வைப்பதன் பலன்: அலுவலகத்தின் தென்கிழக்கு திசையில் செடிகள் வைப்பது பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் மேலும் மேலும் வளர்ச்சி ஏற்பட செய்யும்.
- விளக்குகள் மற்றும் அதிர்ஷ்டம்: அதே போல் விளக்கும் தென்கிழக்கு திசையில் இருப்பது போல் பார்த்துக் கொள்ளுங்கள். இது அதிர்ஷ்டத்தையும், செல்வ வளத்தை ஏற்படுத்தும்.
- மேஜையின் திசை மற்றும் சுத்தம்: நீங்கள் அமர்ந்து வேலை செய்யும் மேஜை வடகிழக்காக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். அந்த மேஜை எப்போதும் சுத்தமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இது அதிர்ஷ்டத்தையும் அதிகப்படியான வளத்தையும் வளர்ச்சியையும் தரும்.
- தண்ணீர் படங்கள் வேண்டாம்: உங்களுக்கு பின்னால் இருக்கும் சுவற்றில் ஒரு போதும் தண்ணீர் கொட்டுவது அல்லது தண்ணீர் இருப்பது போன்ற போஸ்டர் அல்லது படங்களைக் கொண்டு அலங்கரிக்காதீர்கள். இது உங்களுக்கு நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி விடும்.
- உடைந்த நாற்காலிகள் தவிர்ப்பு: உடைந்த நாற்காலிகள் இருந்தால் உடனடியாக அவற்றை மாற்றி விடுங்கள் அல்லது சரி செய்து விடுங்கள். விரிசல் விட்ட அல்லது உடைந்த நாற்காலிகள் துரதிஷ்டத்தை ஏற்படுத்தி விடும்.
இந்த வாஸ்து குறிப்புகள் உங்கள் தொழில் மற்றும் பணியில் வளத்தை கொண்டுவர உதவும். முருகப்பெருமானின் அருளால் உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.