ஜோதிடத்தின்படி, செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி தேவியின் சிறப்பு அருளைப் பெறும் ஐந்து ராசிகள் உள்ளன. இந்த ராசிக்காரர்கள் இயற்கையாகவே சிறந்த குணநலன்கள், விடாமுயற்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் வாழ்வார்கள். இவர்களின் வாழ்வில் நிதி நன்மைகள் நிரம்பி இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என தமிழ் ஜோதிடம் கூறும் தகவல்களை இங்கு காணலாம்.
மேஷ ராசி
செவ்வாய் பகவான் ஆளக்கூடிய மேஷ ராசியினர் மிகவும் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். இவர்களின் வலிமையும், ஆற்றல் மிக்க செயல்பாட்டின் மூலம் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள். பணியில் நேர்மையாகவும், தலைமைத்துவம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு எப்போது மகாலட்சுமி தேவியின் அருள் நிரம்பி இருப்பதால், நிதி ஆதாயம் சிறப்பாகவே இருக்கும்.
ரிஷப ராசி
மகாலட்சுமி தேவியின் நல்ல அருளை பெறக்கூடிய சுக்கிர பகவான் ஆளக்கூடிய ராசி ரிஷபம். இவர்களின் சொல், செயல், உடல் வாழ்வு மற்றவர்களை ஈர்க்கக் கூடியதாக இருக்கும். இவர்களின் சிறப்பான செயல்பாடு காரணமாக மகாலட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்த ராசியாக இருக்கும். இவர்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் வாழ விரும்பக் கூடியவர்களாக இருப்பார்கள். இருப்பினும் எந்த ஒரு செயலையும் மிக நேர்த்தியாக செய்ய விரும்புவார்கள். இதன் காரணமாக பணம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பிரச்சனையும் இவர்களுக்கு ஏற்படுவதில்லை.
மிதுன ராசி
ஜோதிடத்தின் படி மிதுன ராசிக்காரர்கள் இயல்பிலேயே மென்மையானவர்களாக இருப்பார்கள். இவர்கள் பிறர் மீது பாசம் மற்றும் அக்கறை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் தனித்துவமான செயல்பாட்டின் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றத்தை பெறுவார்கள். இவர்களின் அறிவுத்திறன், கேள்வி கேட்கும் திறன் உள்ளிட்ட விஷயங்கள் இவர்கள் செய்யக்கூடிய வேலை, தொழில் போன்ற விஷயத்தில் நல்ல வெற்றியை பெறுவார்கள். இதனால் இவர்களுக்கு பணம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாது.
கன்னி ராசி
புதன் பகவான் ஆளக்கூடிய கன்னி ராசியினர் மிகவும் விசுவாசமானவர்கள். அதோடு தனித்துவமாகச் செயல்பட நினைக்கக் கூடியவர்கள். நேர்மையாகவும், எந்த ஒரு வேலையும் பகுப்பாய்ந்து செயல்படக்கூடிய இவர்கள் தனித்துவத்துடன் திறமையை பயன்படுத்துவார்கள். இதனால் இவர்களுக்கு கடின உழைப்பு தேவைப்படுவதில்லை. இவர்களின் சிறப்பான செயல்பாட்டால் வாழ்க்கையில் பெரிய உயரங்களை அடைகிறார்கள். எப்போதும் பிறருக்கு உதவ தயாராக இருக்கும் இவர்கள், மகாலட்சுமி அருள் நிரம்ப பெற்றிருப்பவர்களாக இருப்பார்கள்.
துலாம் ராசி
சுக்கிர பகவான் ஆளக்கூடிய துலாம் ராசி சேர்ந்த நபர்கள் அனைவரையும் அனுசரித்துச் செல்லக்கூடியவர்கள். இவர்களுக்கு இயற்கையாகவே சொகுசு வாழ்க்கை அமையும். அவர்களும் அதே எதிர்பார்ப்பார்கள். அதோட இவர்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு தன்மையுடன் எப்போதும் செயல்படுவார்கள். இவர்களின் இனிமையான பழக்க குணம், சச்சரவுகளை எப்படி கையாள்வது என சிறப்பாக தெரிந்து வைத்து இருப்பார்கள். இதனால் பணியிடத்திலே எந்தவித தகராறு, பிரச்சனைகளை சந்திப்பதில்லை. மேலும் மகாலட்சுமி தேவியின் அருளால் நிதிநிலை சிறப்பான முன்னேற்றத்தை பெற்றிருப்பார்கள்.
மகாலட்சுமியின் அருளைப் பெறும் ராசிகளின் சிறப்பு அம்சங்கள்:
- மேஷம்: விடாமுயற்சி, தலைமைத்துவம், நிதி ஆதாயம்.
- ரிஷபம்: சுக்கிரன் அருள், ஈர்க்கும் குணநலன், நிதி பாதுகாப்பு.
- மிதுனம்: அறிவுத்திறன், பாசம், தொழில் வெற்றி.
- கன்னி: விசுவாசம், பகுப்பாய்வு திறன், கடின உழைப்பின்றி வெற்றி.
- துலாம்: அனுசரிக்கும் குணம், சொகுசு வாழ்க்கை, சிறந்த நிதி மேலாண்மை.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஜோதிடத்தின்படி, மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் ஆகிய ஐந்து ராசிக்காரர்கள் மகாலட்சுமி தேவியின் சிறப்பு அருளைப் பெறுகின்றனர்.
இந்த ராசிக்காரர்கள் சிறந்த குணநலன்கள், விடாமுயற்சி, கடின உழைப்பு, தலைமைத்துவம், மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை பெறுவார்கள். இவர்களின் வாழ்வில் நிதி நன்மைகள் நிரம்பி இருக்கும்.