Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

சிவபெருமான் ஏன் சுடுகாட்டை விரும்புகிறார்?

இந்து மதத்தில், சிவபெருமான் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என அனைத்திற்கும் தலைவராகவும், எங்கும் நிறைந்தவராகவும் போற்றப்படுகிறார். இந்த தமிழ் ஆன்மீக பூமியில், ஜோதிடம் மற்றும் பல புராணக் கதைகள் வழியாக நாம் பல்வேறு தெய்வங்களின் லீலைகளை அறிந்துகொள்கிறோம். குறிப்பாக முருகன் மற்றும் அவரது ஆறுபடை வீடுகள், முருகன் ஆலயங்கள் ஆகியவை பக்தர்களின் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றவை. அதேவேளையில், ஈசன் சிவபெருமானின் ஒரு விசித்திரமான விருப்பம் பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது: அவர் சுடுகாட்டை ஏன் இவ்வளவு விரும்புகிறார்? அதன் பின்னணியில் உள்ள ஆழமான கருணையை இங்கே காண்போம்.

ஆதிப்பரம்பொருள் ஈசன் சிவபெருமான் எங்கும் எதிலும் நிறைந்திருக்கிறார். கயிலாயத்தில் இருப்பிடம் கொண்டிருக்கிறார்; வெள்ளியங்கிரியில் தங்கி இருக்கிறார்; அனைத்து சிவாலயங்களிலும் வாசம் செய்கிறார்; இவ்வளவு ஏன் நாம் ஒரு பிடி மண்ணை பக்தியுடன் லிங்க வடிவில் பிடித்து வைத்தால் அங்கும் வந்து விடுகிறார். இவ்வளவு இருக்க அவருக்கு பிடித்த இடம் எது தெரியுமா? சுடுகாடு தானாம்! அதனால் தான் சிவ பெருமானுக்கு சுடுகாட்டு சாமி, சுடலைமாடன் சாமி போன்ற பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.

சிவபெருமானுக்கும் சுடுகாட்டிற்கும் என்ன சம்பந்தம்?

அதற்கு சில காரணங்களை அவரே கூறியுள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. ஒருமுறை பார்வதி தேவி சிவபெருமானிடம் 'பூமியில் உங்களுக்காக பிரத்யேகமான எவ்வளவோ ஆலயங்களும், மடங்களும், மலைகளும் இருக்கின்றதே, ஆனால் நீங்கள் ஏன் எப்பொழுதும் சுடுகாட்டில் தங்கிக் கொண்டிருக்கிறீர்கள் சுவாமி?' என்று கேட்கிறார்.

அதற்கு சிவபெருமான், "எல்லா மனிதர்களும் இறந்த பிறகு வருகிற ஒரே இடம் சுடுகாடு மட்டும் தான். அவர்கள் உயிரோடு இருக்கும் போது யாருமே தூய அன்புடனோ பக்தியுடனோ என்னிடம் வருவது இல்லை. எனக்கு பொன் பொருளை கொடு, வீடு வாசலை கொடு என செல்வங்களுக்காக மட்டுமே வேண்டுகின்றனர்."

முக்தியை நினைத்து கலங்கும் ஆத்மா:

"அவர்கள் இறந்த பிறகு உறவினர்கள் இறந்த வரை நினைத்து ஓரிரு வாரங்கள் அல்லது மாதங்கள் மட்டுமே கவலைப் படுகின்றனர். பின்னர் இறந்தவர் சேர்த்து வைத்த சொத்து, தங்கம், பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விடுகின்றனர். யாருடைய நினைவிலும் வாழக்கையிலும் இல்லாத அந்த இறந்தவரின் ஆத்மா அந்த நேரத்தில் தான் கலங்கி நிற்கிறது. நாம் வாழ்நாள் முழுவதுமே பொன் பொருளுக்காக மட்டுமே ஓடியிருக்கிறோம். மோட்சம் முக்தியை நினைத்து வாழவில்லை. அதனால் தான் இன்று தனித்து இருக்கிறோம் என்று பயந்து நடுங்கிக் கொண்டிருக்குமாம்."

"யாருமே துணை இன்றி பயந்து, கலங்கி, தன்னந்தனியாக தவிக்கும் ஆன்மாவிற்கு, நீ தனியாக இல்லை; உனக்கு துணையாக உன் அப்பன் நான் இருக்கிறேன். நீ எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறி, சமாதானம் செய்து, தன் நிலையை நினைத்து தவித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவிற்கு முக்தி அளிப்பதற்காகவே நான் சுடுகாட்டில் வாசம் செய்கிறேன் தேவி" என சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறியுள்ளதாக இந்து புராணங்கள் தெரிவிக்கின்றன.

"இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஜீவ ராசிக்கும் நாம் தானே 'ஜகத பிதர வந்தே பார்வதி பரமேஸ்வரா', தாய் தந்தையாக இருந்து அவர்கள் வாழ்க்கையின் போதும், வாழக்கைக்கு பிறகும் நாம் தானே அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அது நம் கடமை தானே தேவி" என சிவபெருமான் பார்வதி தேவியிடம் கேட்டுள்ளாராம்.

"நீங்கள் சொல்வது சரி தான் சுவாமி, நான் இந்த ஒரு விஷயத்தை என்றுமே யோசித்தது இல்லை. ஒவ்வொரு மனிதனின் இறப்புக்கு பிறகும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதற்காக தான் நீங்கள் சுடுகாட்டில் வாசம் செய்கிறீர்கள் என எனக்கு தெரியாமல் போயிற்று" என்று பார்வதி தேவி வருந்தினாராம். இது ஆன்மீகம் உணர்த்தும் ஒரு ஆழமான உண்மை.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இறந்த ஆன்மாக்களுக்கு துணையாக இருந்து, அவர்களுக்கு மோட்சம் மற்றும் முக்தி அளிப்பதற்காகவே சுடுகாட்டில் வாசம் செய்வதாக சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறினார்.

வாழ்நாள் முழுவதும் பொன், பொருளுக்காக ஓடி, தனித்து தவிக்கும் ஆன்மாக்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு முக்தி நிலையை அடைய உதவுகிறார்.

Our Other Services